ஹோண்டா சிபிஆர்150ஆர், சிபிஆர் 250ஆர் பைக்குகளுக்கு இந்தியாவில் ரீகால்!

குறைபாடுடைய உதிரிபாகத்தால் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால், இந்தியாவில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகளில் ஆய்வு செய்ய திரும்ப அழைக்கப்படுகின்றன.
இந்த இரு பைக்குகளின் அசெம்பிள் செய்யப்பட்டபோது, ஸ்டார்ட்டர் ரிலே சுவிட்சில் சீலண்ட் சரியாக கொடுக்கப்படவில்லை. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் சிஸ்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், பைக் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படுவதோடு, சில சமயம் தீப்பிடிக்கும் ஆபத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகளின் ஸ்டார்ட்டர் ரிலே சுவிட்சில் சீலண்ட் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக திரும்ப அழைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை ஹரியான மாநிலம், மானேசரில் உள்ள ஹோண்டா ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்ட ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் திரும்ப அழைக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அப்படி குறைபாடு இருந்தால்,சம்பந்தப்பட்ட உதிரிபாகத்தை இலவசமாக மாற்றித் தரவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.இந்த மாத மத்தியிலிருந்து இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற் குறிப்பிட்ட தயாரிப்பு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலரை அணுகலாம்.

No comments:

Post a Comment