இப்போது நம்முடைய தூத்துக்குடி மறைமாவட்டத்தைப் பற்றியும் இந்த மறைமாவட்டத்துக்கு நம்முடைய இனத்தின் பங்களிப்பு பற்றியும் தற்போது ஒன்றிரண்டு குருக்களால் நாம் படும் கேவலங்கள் பற்றியும் பார்ப்போம்.
தூத்துக்குடி மறைமாவட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததும் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களைக் கொண்டதும் ஆகும். 1923 இல் திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டு புதிய மறைமாவட்டமாக உருவாக்கப் பட்டது. 340000 கத்தோலிக்கர்கள், 190 குருக்கள், 105பங்குகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களை உள்ளடக்கியது இந்த மறைமாவட்டம்.
ஆயர் திபுர்சயுஸ் ரோச், ஆயர் பீட்டர் பெர்னாண்டோ ,ஆயர் தாமஸ் பெர்னாண்டோ என்று பெருமை பெற்ற ஆயர்களைக் கொண்டது.
குருக்களுக்கு உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மறைதிரு.காகூ என்னும் வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு குருவானவர் உவரி பங்கில் குருவாக இருந்த சமயம் உவரியில் பயங்கர கொள்ளை நோய் வந்தது. தொற்று நோயாக இருந்த அந்த சமயத்திலும் மறைதிரு.காகூ அவர்கள் இரவு 9 மணிக்கு கையில் மெழுகுவர்த்தியுடன் ஊரைச் சுற்றி மந்திரித்து கொள்ளை நோயை விரட்டியதாகவும் அவருக்கு காவலாக ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் அவரை அமைதியாக பின் தொடர்ந்து சென்றதாகவும் மக்கள் கூறினர். அவரின் இறப்பைத் தாங்க முடியாமல் மக்கள் கதறியதையும் பல மைல் தூரம் கடந்து அவரின் இறப்பு ஊர்வலத்தில் பங்கேற்றதையும் படித்துள்ளேன் (நன்றி : ஆழி சூழ் உலகு)
இதைப் போல் ஏராளமான புனிதத்துவம் நிறைந்த குருக்கள் மற்றும் அருட் சகோதரிகளைக் கொண்ட பெருமை இந்த மறைமாவட்டத்துக்கு உண்டு.
இவ்வாறாக நமது இனத்தவர் இந்த மறைமாவட்டத்துக்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அப்படிப் பட்ட இந்த மறைமாவட்டத்தில் ஒன்றிரண்டு குருக்கள் செய்யும் தவறுகளினால் மறைமாவட்டமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்கள் மதுரை ஆர்ச் பிஷப் ஆன பின்பு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பிஷப் பணியிடம் காலியாக இருந்தது. ஏராளமான படித்த, அதிகம் படித்த, பிஷப் ஆவதற்குத் தகுதியான துறவிகளைக் கொண்டிருந்த போதும் நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப் படவில்லை. இதற்குக் காரணம் வேறு யாரும் இல்லை. சாட்சாத் நம்மவர்கள் தான்!!!
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மாறாக அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போயாக வேண்டும் என்ற ஒரு பரந்த?! மனப்பான்மை கொண்டு உள்ளடி வேலைகளைப் பார்த்து கடைசியில் நம்மவர் யாருக்கும் கிடைக்காமல் செய்து விட்டனர் அந்த நல்ல நம்மவர்கள் சிலர்.
கடைசியில் என்ன ஆயிற்று? பிஷப் இவான் அம்புரோஸ் கும்பகோணம் மறைமாவட்டத்திலிரிந்து நியமிக்கப்பட்டார்.
இப்போது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா !!!
தொடரும்…
1 comment:
அதுக்கு யென சையுனும் சொல்லுங்க???? ஒரு பிச்சைகரனுக்க்ஹு பிச்சை போட்ரிங்க்ஹா அவன் நல்லா வ்நதுரன் பிச்சை போட்டவன்கஷ்டபடுரன் அதுக்காக பொய் பிச்சை காரன் ட பொய் காசா கேக்க வேணும். இனிமையாவது கொஞ்சம் மக்கள் பணம்மா கோயில்களில் போடுவது நிறுத்தவேண்டும் நிறுத்திட்டு கல்வி நிலைகளில் முதலிடு பனா வேண்டும் இந்த மற்றும் எப்பொது வருதோ அப்பம் தான் நம்மா மக்காளுக்ஹு விடுவுகாலம்.
Post a Comment